
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இத்தொடரில் விளையாட மட்டார்கள் என்பதால் அணியின் வேகப்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.