
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்த முத்தரப்புத் தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமானது. அந்தவகையில் இந்த முத்தரப்பு தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.