மழை காரணமாக விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது - ஷுப்மன் கில்!
விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது, மழை வந்ததால், ஷாட்களை அடிப்பது எளிதாக இல்லை, எனவே அது எங்கள் ரேஞ்சில் இருக்கும்போது மட்டுமே பெரிய ஷாட்டை விளையாட முடிவுசெய்தோம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 43 ரன்களையும், ஜோஸ் பட்லர் 30 ரன்களையும், ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஷுப்மன் கில், “மழைக்குப் பிறகு நாங்கள் பேட்டிங் செய்ய வந்தபோது கொஞ்சம் குழப்பம் இருந்தது, ஆனால் உங்கள் பக்கத்தில் ஒரு வெற்றி இருப்பது எப்போதும் நல்லது. பவர்பிளேயில் விளையாட்டுத் திட்டங்கள் வித்தியாசமாக இருந்தன, மழை பெய்து கொண்டிருந்தது, ஒரு டெஸ்ட் போட்டியைப் போல உணரக்கூடிய சூழ்நிலை இருந்தது. பவர்பிளேவுக்குப் பிறகு நாங்கள் ஆட்டத்தைத் தொடங்க விரும்பினோம், ஆனால் மழை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அதனால் விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது, மழை வந்ததால், ஷாட்களை அடிப்பது எளிதாக இல்லை, எனவே அது எங்கள் ரேஞ்சில் இருக்கும்போது, நாங்கள் அதைச் செய்வோம் என்று நினைத்தோம். அது வெறுப்பாக இருந்தது, ஒரு கட்டத்தில் நாங்கள் முன்னால் இருந்தோம், ஆனால் பிறகு 20 ரன்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக இருந்து. ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் சரியாக பயன்படுத்தினோம்.
Also Read: LIVE Cricket Score
நீங்கள் 150 என்ற இலக்கை துரத்தும்போது போட்டி கடைசி பந்து வரை செல்லும்போது, ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானதாகிவிடும். ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் இதுபோன்ற வெற்றிகள் உங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த ஆட்டத்தில் ரஷித் கான் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. மேலும் காயத்தில் இருந்து மீண்டு அவர் இவ்வாறு பந்துவீசுவது எளிதானது அல்லா. அவர் மீண்டும் சிறப்பாக பந்துவீசுவாதை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now