இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 405 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் தனி ஒருவனாக போராடி 101 ரன்களும் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 76 ரன்களும் எடுக்காமல் போயிருந்தால் இன்னும் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம். அதே போல பந்து வீச்சுத் துறையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தவிர்த்து ஏனைய வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதும் தோல்வியை கொடுத்தது.
Trending
மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்ட இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டது. இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “3ஆவது நாள் துவங்கிய போது நான் இந்தியா போராடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதினேன். ஆனால் அது நடைபெறவில்லை. இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து யாருமே சிறப்பாக செயல்பட்டதாக தெரியவில்லை.
குறிப்பாக எந்த பேட்ஸ்மேன்களும் அசிங்கமாக உடம்பில் அடி வாங்கி நங்கூரமாக நின்று விளையாட விரும்பாதது போல் தெரிந்தது. ரபாடாவின் வேகத்தில் ரோஹித் சர்மா 2 இன்னிங்சிலும் அவுட்டானார். ஜெய்ஸ்வால் இது போன்ற சூழ்நிலைகளில் அசத்துவதற்கான வழியை இன்னும் கண்டறிகிறார். ஸ்ரேயாஸ் நன்றாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா சென்ற போது சிறப்பாக விளையாடிய கில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார்.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் டி20 போட்டிகளிலும் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதை விட இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாடுகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே வெளிநாட்டு போட்டிகளில் அவருடைய இடம் கேள்விக்குறியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now