இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிதிச் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்று வீர நடை போட்டு வருகிறது.
மேலும் தற்போதைய அணியில் அனைவருமே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக 2011 போல இந்தியா இம்முறை கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களுக்கு கவலையாகவே இருக்கிறது.
Trending
ஏனெனில் லீக் சுற்றிலேயே ஒரு சில தோல்விகளை சந்தித்தால் பலம் பலவீனங்களை நன்றாக அறிந்து நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான பாடங்களை கற்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக வென்றுள்ளதால் பலவீனமே இல்லாத அணியை போல் காட்சியளிக்கும் இந்தியா 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் திடீரென சொதப்பி தோல்வியை சந்திக்கும் கதையை மீண்டும் அரங்கேற்றி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்றார் போல் 2019 அரையிதி உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே பரிசளித்து வரும் நியூசிலாந்தை முதல் அரையிதிச்சுற்றில் இந்தியா எதிர்கொள்வது ரசிகர்களுக்கு மற்றுமொரு கவலையை கொடுக்கிறது. இந்நிலையில் 8 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “இந்தியா இத்தொடரில் கடைசி வரை தோல்வியை சந்திக்காது என்று நம்புகிறேன். இது உண்மையில் முயற்சி செய்ய வேண்டிய ஒன்று. குறிப்பாக இதுவரை நாங்கள் தொடர்ச்சியாக வென்றுள்ளதால் அரையிறுதியில் மோசமான ஆட்டம் அமையலாம் என்று அவர்கள் பயப்படலாம்.ஆனால் நல்ல முயற்சியால் அவர்கள் அதை ரத்து செய்து எதிர்மறை எண்ணங்களை விரட்ட வேண்டும்.
இதே வழியில் விளையாடலாம் என்ற இன்னும் இந்தியாவிடம் இருக்க வேண்டும். ஒருவேளை நான் இந்திய அணியில் இருந்தால் தொடர்ந்து இதே போல அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொண்டே செல்வோம் என்ற மனநிலையுடன் இருப்பேன். அந்த அணுகுமுறை இதுவரை அவர்களுக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. எனவே அது மாறினால் மட்டுமே விஷயங்கள் தவறாக போகலாம்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now