Advertisement

அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!

கடந்த வருடம் தனது சகோதரி இறந்தபோது தினமும் மூன்று, நான்கு முறை அழுததாகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 11, 2023 • 17:35 PM
There were times when I cried in my room every day, says RCB pacer Harshal Patel
There were times when I cried in my room every day, says RCB pacer Harshal Patel (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல். தற்போது 32 வயதாகும் அவர், இந்திய அணிக்காக இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி வீரராக உள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் 32 விக்கெட்டுகள் எடுத்தார். 

இந்நிலையில் ஆர்சிபி அணியின் பாட்காஸ்ட் சீசன் 2இல் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “என்னுடைய சகோதரி இறந்தபோது ஒரு வருடம் நான் சோகத்தில் இருந்தேன். 2022 ஏப்ரல் மாதத்தில் இறந்தார். நான் அப்போது (ஐபிஎல் போட்டிக்காக) தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். 

Trending


ஊரில் இருந்த என்னுடைய உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஊருக்குச் சென்று அனைவரையும் கட்டி அணைத்து அழவேண்டும் போல இருந்தது. ஆனால் எங்கள் சோகத்தை செல்பேசி வழியாகவே பரிமாறிக் கொண்டோம். அதுதான் எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. 

ஏழு நாள்கள் கழித்து என்னுடைய பையன் பிறந்தான். அப்போது சோகமாக இருக்க வேண்டுமா, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா எனத் தெரியாமல் இருந்தேன். என்னுடைய விடுதி அறையில் தினமும் மூன்று, நான்கு முறை அழுத நேரங்களும் உண்டு. என் மகனை ஃபேஸ்டைம் செயலியில் பார்த்த பிறகு சந்தோஷமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement