
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான இரு அணிகளான சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் மோத இருக்கின்றன. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்க இருக்கின்ற போட்டி 1000வது போட்டியாகும். இந்த இரு அணிகளும் மோதினாலே அது ஐபிஎல் தொடரில் சிறப்பான போட்டிதான். இதில் இப்படி ஒன்று இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
முக்கியமான இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அதிவேக ஆபத்தான வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் விளையாடுவது கடினம் என்று ஒரு பக்கம் செய்தி கசிகிறது. இன்னொரு பக்கத்தில் சென்னை அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் உண்மை இன்னும் தெரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்று விளையாடி வரும் இங்கிலாந்தில் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்ட்டர் மொயின் அலி சென்னை அணியில் பென்ஸ் ஸ்டோக்ஸ் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.