
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் மற்றும் மூன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்களை தேர்வு குழு செய்துள்ளது. குறிப்பாக ஷிகர் தவான், ஒரு நாள் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பில் இருந்த கே எல் ராகுல் நீக்கப்பட்டு அந்த வாய்ப்பு ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், டி20 போட்டியில் சூரியகுமார் யாதவுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் தொடக்க ஜோடியாக யார் களம் இறங்குவார் என்ற சந்தேகம் இருந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு 600 ரன்களுக்கு மேல் சுப்மான் கில் அடித்திருக்கிறார். இதேபோன்று இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்திருக்கிறார். இதனால், அந்த இடத்திற்கு யார் வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது .
இதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், “இது பற்றி நாம் விவாதிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவர் இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவரை எப்படி நீங்கள் நீக்கலாம். இது பற்றி இனி பேசவே கூடாது.என்னை பொறுத்தவரை ரோஹித் சர்மாவின் ஜோடியாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும்.