Advertisement

பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!

பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

Advertisement
There's no replacement in the world for Jasprit; Siraj is a likely option: Shane Watson
There's no replacement in the world for Jasprit; Siraj is a likely option: Shane Watson (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 03, 2022 • 12:21 PM

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இம்மாதம் 16-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தயாராகி வரும் வேளையில் இந்திய அணியும் ரோஹித் சர்மா தலைமையில் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 03, 2022 • 12:21 PM

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? வெல்லாதா ? என்ற பெரிய கேள்வியே சமூகவலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பும்ரா எதிர்வரும் இந்த டி20 உலககோப்பை தொடரில் இருந்து முதுகு வலி காரணமாக விலக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது.

Trending

அதனைத்தொடர்ந்து இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா வெளியேறினால் அது இந்திய அணிக்கு ஏற்படவுள்ள பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதோடு பும்ராவின் காயம் குணமடைய நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவை என்பதால் அவர் இந்திய அணியில் மீண்டும் இணைய நீண்ட மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “பும்ராவிற்கு மாற்று வீரர் உலகில் யாரும் உலகில் இல்லை. டி20 உலக கோப்பையில் பும்ரா இல்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான். நம்ப முடியாத திறமை படைத்த பும்ரா சிறந்த பந்துவீச்சை வழங்கக்கூடியவர். அவர் இல்லாமல் இந்திய அணி பெரும் சவாலை சந்திக்கும்.

மேலும் ஜஸ்பிரிட் பும்ரா கிடைக்கவில்லை என்றால் நான் தேர்வு செய்யும்  வீரர் முகமது சிராஜ், ஏனெனில் புத்தம் புதிய பந்தில் சிராஜ் சிறந்தவர். அவர் வேகமானவர், அவர் பந்தை ஸ்விங் செய்தார். அவரது தற்காப்பு திறமையும் நன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து 3 போட்டிகள் கொண்ட டி20 விளையாடி வருகிறது. இந்த தொடரில் இருந்தும் வெளியேறிய பும்ரா தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு மாற்றாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement