
they-wont-stop-giving-us-heart-attacks-preity-zinta-tweets (Image Source: Google)
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
அதிலும் இப்போட்டியின் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தேஜாவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆட்டம் உணர்த்தியது. கடந்த ஐபிஎல் சீசனிலும் இதேபோன்று இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது.