
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது தொடர் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ள நிலையில், நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.
ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகள் மற்றும் இரண்டு முடிவில்லை என மொத்தமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற்றதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியதற்கு அந்த அணியே காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் கூறிவுள்ளார்.