இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஏற்கெனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணிக்கு இத்தொடர் தோல்விகளும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வெஸ்ட் இண்டிஸ் அவர்களுக்கே உரித்தான சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தி அதிக சிக்ஸர்களை அடித்தார்கள்.
Trending
அதனைத் தடுப்பதற்கும் சில யுக்திகளை நாங்கள் கையாண்டோம். அவர்களின் சிக்ஸர் அடிக்கும் திறன் டி20 தொடர் முழுமைக்கும் தொடர்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 64 சிக்ஸர்களை அடித்தனர். இங்கிலாந்து 56 சிக்ஸர்களை விளாசியது. தோல்வியை ஏற்றுக் கொள்வது கடினம். இருப்பினும், எங்களுக்கு சில நேர்மறையான விஷயங்களும் இந்த தொடர்களின் மூலம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்தது. இருப்பினும், ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now