
லண்டனில் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
இதில் துர்ஹாம்அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் இந்திய வீரர் புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்து 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். மற்றொரு முனையில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இருவரும் கடைசிநேர பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி உரையாடியதை கவுன்ட்சி சாம்பியன்ஷிப் நிர்வாகமே புகழ்ந்துள்ளது.
கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக் பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த இரு வீரர்கள் ஒற்றுமையாக ஒரே அணியில் விளையாடுவதும், பார்ட்னர்ஷிப் அமைத்து பேட் செய்வதும், மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுவதும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.