
உலக கிரிக்கெட்டில் இன்னும் சில நாட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிவப்புப்பந்துப் போட்டிகள் இங்கிலாந்தில் வைத்து நடக்க இருக்கின்றன. இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.
இதற்கு அடுத்து சில நாட்களில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிப் பெற்று இருந்தாலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வைத்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.
இந்த இரண்டு தொடர்கள் குறித்தும் பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன், “ஆமாம் நாங்கள் இங்கு ஆஷஸ் தொடர் விளையாட இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னால் ஒரு மிகப்பெரிய போட்டியில் விளையாட இருக்கின்றோம். பின்னர் எங்களுடைய சீசன் அடிப்படையிலிருந்து துவங்குகிறது.