
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கான்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பிரப்ஷிம்ரன் சிங் ஒரு ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா - ரியான் பராக் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 94 ரன்களில் விக்கெட்டை இழந்து வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் 58 ரன்களில் ரியான் பராக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷித் ரானா 21 ரன்களையும், ரவி பிஷ்னோய் 26 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இந்திய ஏ அணி 45.5 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்திரேலிய ஏ அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளையும், தன்விர் சங்கா, வில் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 25 ஓவர்களில் 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.