
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை வேகமாக எழுந்து, வெல்ல வேண்டிய போட்டியில் இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் ஒன்பது பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பரிதாபமாக ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிஷான் 23 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். இரண்டாவது வாய்ப்பைப் பெற்ற சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷார்ட் விளையாடி 7 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இப்படி விக்கட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் இளம் வீரர் திலக் வர்மா ஆட்டத்தை காட்டினார்.