
Tilak Varma Joins Hampshire: இந்திய அணியின் இளம் அதிரடி பேட்டரான திலக் வர்மா, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் சீனில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் திலக் வர்மா. கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரையிலும் 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 68 ரன்களையும், 25 டி20 சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதம், 3 அரைசதங்களுடன் 749 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 54 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 அரைசதங்களுடன் 1499 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “ஹைதராபாத்தை சேர்ந்த சர்வதேச திலக் வர்மாவை, இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் லீக்கில் விளையாட ஹாம்ப்ஷயர் அணி அணுகியுள்ளது.