
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில், அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்கள் குவித்தார். முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா இடம் பெற்று விளையாடினார். இதில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “ இவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான்.