வைட் பந்தை அடிக்க டைவ் அடித்த டிம் செய்ஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் புதிய முறையில் பந்தை அடிக்க முயன்ற காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்ட நிலையில், அடுத்து நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து கோப்பையை பகிர்ந்துகொண்டனர்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69 ரன்களையும், ஃப்கர் ஸமான் 43 ரன்களையும் சேர்த்தனர்.
Trending
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் 52 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 38 ரன்களைச் சேர்த்து போராடிய நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Tim Seifert gives a full stretch dive to play that ball. pic.twitter.com/LoOBdQDIO5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வீசிய வைட் பந்தை டைவ் அடித்து அடிக்க முயன்றார். ஆனாலும் அவரால் அந்த பந்தை அடிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் அந்த பந்தை அடிக்க டைவ் அடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now