Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ அறிவித்துள்ளார்.

Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 15, 2024 • 09:23 AM

நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 15, 2024 • 09:23 AM

இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Trending

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ, தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சிறு வயதில் இருந்தே நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.அந்தவகையில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம். ஆனால் தற்சமயம் இந்த விளையாட்டில் இருந்து விலகுவதற்கான நேரம் சரியானது.

டெஸ்ட் கிரிக்கெட் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் தற்சமயம் அதிலிருந்து நான் விலகும் நேரமும் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக எனக்கும் எனது வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், எங்கள் ரசிகர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது எனக்கு ஒரு அற்புதமான சவாரியாக இருந்தது. அதனால் நான் எதனையும் மாற்ற விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக 2008ஆம் ஆண்டு அறிமுகமான டிம் சௌதீ இதுநாள் வரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளையும், 2185 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கே), டாம் பிளெண்டல், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர் (2வது மற்றும் 3வது டெஸ்ட்), நாதன் ஸ்மித், டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement