
TKR vs BR Eliminator Caribbean Premier League 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபிஎல் தொடரில் டிகேஆர் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் பட்டியலின் 3ஆம் இடத்தையும், ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் தலா 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TKR vs BR Eliminator: Match Details
- மோதும் அணிகள்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
- இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - அக்டோபர் 2, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
TKR vs BR Eliminator: Ground Pitch Report
இந்த மைதானத்தில் இதுவரை 35 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.
TKR vs BR Eliminator: Head-to-Head
- Total Matches: 23
- Trinbago Knight Riders: 14
- Barbados Royals: 9
- No Result: 00