
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Trinbago Knight Riders vs Guyana Amazon Warriors, Match 19 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விளையாடிய 4 போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
TKR vs GAW: Match Details
- மோதும் அணிகள்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
- இடம் - குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட்
- நேரம் - செப்டம்பர் 19, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)