
TNPL 2021: Chepauk Super Gillies vs Thirppur Thmizhans Match Preview (Image Source: Google)
நேற்று தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், இந்த சீசனில் அறிமுகமாகியுள்ள திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கௌசிக் காந்தி, நாராயணன் ஜெகதீசன், சந்தீப் வாரியர், அலெக்ஸாண்டர், மணிமாரன் சித்தார்த் என நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.