
TNPL 2021: Dindigul team targets 146 runs! (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசனில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணியின் தொடக்க வீரர்கள் அமித் சத்விக் 12 ரன்னிலும், சுமந்த் ஜெய்ன் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ராஜகோபால் - ஆதன் கான் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஆதன் கான் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையடி வந்த ராஜகோபாலும் 45 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.