
TNPL 2021: Full Squads, Venue, Schedule, Timings - All You Need to Know (Image Source: Google)
ஐபிஎல் தொடரைப் போலவே, தமிழ்நாட்டில் தமிழ்நாடு பிரீமியர் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளன நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் நடத்தப்படவில்லை. இதையடுத்து டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மொத்த எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரவுண்ட் ராபின் முறையில் 38ஆட்டங்களாக நடைபெறுகிறது. மேலும் கரோனா பரவல் காரணமாக போட்டிகள் அனைத்து சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும் நடைபெறும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.