
TNPL 2021: Ruby Trichy Warriors Faces Off Dindigul Dragons today (Image Source: Google)
தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் லீக் ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பாண்டு டிஎன்பிஎல் சீசனில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, இரண்டு வெற்றி என புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதிலும் அந்த அணியில் ஆதன் கான், ஆதித்யா ஆகியோர சிறப்பான ஃபார்மில் உள்ளதால் அவர்களில் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. பந்துவீச்சில் பொறுத்தவரை சர்வண் குமார், மதிவண்ணன் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது எதிரணிக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும்.