
TNPL 2021 : Salem Spartans bowled out for 116 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் முருகன் அஸ்வினைத் தவிர மற்றவர்களில் யாரும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.