
TNPL 2021: Salem Spartans Face Off Thiruppur Thamizhans Today (Image Source: Google)
டிஎன்பில் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.
இதில் இரவு நடைபெறும் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த இரு அணிகளும் நடப்பு சீசனில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அணிகளாகும்.
அதேபோல் இந்த இரு அணிகளுடைய முதல் லீக் ஆட்டங்களும் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டதாலும் இரு அணிகளில் பேட்டிங் திறனை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.