Advertisement

டிஎன்பிஎல் 2021: சங்கர், அஸ்வின் அதிரடியில் வலிமையான இலக்கை நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!

மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
TNPL 2021 : Salem Spartans finish with 145 on the board
TNPL 2021 : Salem Spartans finish with 145 on the board (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 07, 2021 • 09:09 PM

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 07, 2021 • 09:09 PM

அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணியில் ஸ்ரீநிவாசன், உமாசங்கர் சுசில், அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் - கேப்டன் ஃபெராரியோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 47 ரன்களையும், முருகன் அஸ்வின் 20 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement