
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்களில் ஏலம் நடைபெறவுள்ளதாகவும், ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் ஏலத்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த முடிவுகள் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎல் கவுன்சில் கூட்டத்தில் எட்டப்பட்டது எனவும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஏலத்தை நடத்துவதற்கான நடவடிக்கையும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டிஎன்பிஎல் தொடர் போட்டியில் பங்கேற்க விரும்பும் அனைத்து வீரர்களும் டிசம்பர் 28 முதல் ஜனவரி 20, 2023க்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.