
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 24ஆவது போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய, தொடக்க வீரர் சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து வந்த சச்சின் மற்றும் கேப்டன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஷாருக்கான் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் குர்ஜாப்னீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணியில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் லோகேஷ்வர் - ஹரி நிஷாந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் லோகேஷ்வர் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹரி நிஷாந்த் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.