
டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஆதித்யா - ஹரி நிஷந்த் இணை களமிறங்கியனர். இதில் ஆதித்யா 6 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 2 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் 4 ரன்களுக்கும், சுரேஷ் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து வந்த ஸ்ரீ அபிஷேக் 21 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 11 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - சரவணன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார்.