
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் இன்று மாலை நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின . இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை அணியில் கேப்டன் ஹரி நிஷந்த் ஒரு முனையில் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஹரி நிஷாந்த் அரைசதம் கடந்த நிலையில் 64 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். நெல்லை அணி சார்பில் மோஹன் பிரசாத் 3 விக்கெட் வீழ்த்தினார்.