
கோவை: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராம் அரவிந்த் மற்றும் சதுர்வேத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற மதுரை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஜித்தேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ்வர் 20 ரன்னிலும், ஜித்தேந்திர குமார் 17 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் சச்சினும் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன்களிலும், மாதவ் பிரசாத் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஷாருக் கான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. மதுரை அணி தரப்பில் முருகன் அஸ்வின், சரவணன், விக்னேஷ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.