
TNPL is expected to begin on June 27 (Image Source: Google)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதுவரை 5 டிஎன்பிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றது.
டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎல் போட்டி நடைபெறவில்லை.