Advertisement
Advertisement
Advertisement

ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!

ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 21, 2023 • 13:35 PM
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா! (Image Source: Google)
Advertisement

இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்து அதன் பிறகு டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான மினி ஏலமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இந்த ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் 77 வீரர்கள் மட்டுமே அனைத்து அணிகளாலும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது. 

Trending


இதன் காரணமாக குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா வெளியேறியது குறித்தும், ஷுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா, “ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம். எனினும் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில், கடந்த சில ஆண்டுகளாக தன்னை மேம்படுத்திக் கொண்டு வருவதாகவும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement