
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபில் அணியானது வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 147 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 37 ரன்களையும், கரண் சகோதரர்கள் தலா 25 ரன்களையும் சேர்த்தனர். சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் டேவிஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.