
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று தொடங்கியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - லோர்கன் டக்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் டக்கருடன் இணைந்த டெக்டரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரு மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹாரி டெக்டர் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய லோர்கன் டக்கரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கர்டிஸ் காம்பேர் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.