
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கல் மெகா எலாத்தில் பங்கேற்கும் அணிகளின் ஏலத்திகையானது ரூ. 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகையானது ரூ.110 கோடிகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கொண்டு எதிர்வரும் வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்தது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் குறிப்பிட்டது.
அந்தவகையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.