
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் (Image Source: Google)
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 18அவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
அர்ஷ்தீப் சிங்
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளார், அவர் இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்ததுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.