
Top Class, Series Defining Knock: Ex-Cricketers Laud Rohit Sharma's Ton (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
அயல்நாட்டு மண்ணில் முதல் சதம் அடித்த ரோகித் சர்மாவிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண் ரோகித் சர்மாவின் இந்த அபாரமான இன்னிசை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “டாப் கிளாஸ் இன்னிங்ஸ் ஒரு ஹை கிளாஸ் பிளேயரிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த இன்னிங்ஸ் நிச்சயம் இந்த தொடரின் முடிவை மாற்றும் என எதிர்பார்க்கிறேன். இந்த ஸ்கோரை மிகப்பெரிய முன்னிலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பதிவிட்டுள்ளார்.