
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்! (Image Source: Google)
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய வில் ஜேக்ஸும் 62 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட்டும் 95 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டம் ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி ஸ்மித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.