டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள புகழ்பெற்ற கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் முதல் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அணியில் இணைவதற்கு முன்னதாக குணமடையும் வகையில் தீவிரமாக கண்காணிக்கவுள்ளதாகும், அதுவரை அவர் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் பிரிஸ்பேனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Speedy Recovery, Travis Head!#AUSvWI #Australia #TravisHead #Cricket pic.twitter.com/NoiBCczJjg
— CRICKETNMORE (@cricketnmore) January 22, 2024
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்து மைதானத்திலிருந்து வெளியேறிய உஸ்மான் கவாஜா முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now