Advertisement

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்! 

வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 20, 2023 • 15:27 PM
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்! 
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!  (Image Source: Google)
Advertisement

வாரணாசி ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. வரும் 23 ஆம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

Trending


இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் வரும் 2025 ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா தொடங்க உள்ளது. மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது. ஒரு 3டி மாதிரியைத் தயாரித்தல் மற்றும் திட்டத்தின் விவரங்கள் விரைவில் முடிக்கப்படும், அதன் பிறகு எல் அண்ட் டி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன் செய்து எல்லைச் சுவரைக் கட்டும் பணியைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement