Advertisement

ரன் அவுட்டை தவறவிட்ட ஹர்ஷல் படேல்; ரசிகர்கள் விமர்சனம்!

லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் ரன் அவுட்டை தவறவிட்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Advertisement
Twitter Reaction Fans Troll Harshal Patel On Mankading!
Twitter Reaction Fans Troll Harshal Patel On Mankading! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2023 • 01:37 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டமான ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று பரபரப்பாக முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கேப்டன் பாப் 79*, விராட் கோலி 61, மேக்ஸ்வெல் 59 ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவருக்கு 212 ரன்கள் குவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2023 • 01:37 PM

இதற்கு அடுத்து விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்திலேயே மேயர்ஸ், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா ஆகியோர் விக்கட்டுகளை இழந்து விட்டது. இதற்குப் பிறகு கே எல் ராகுலுடன் இணைந்த ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடி 30 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உடனே கே எல் ராகுலும் கிளம்பினார்.

Trending

இதற்கு அடுத்து நிக்கோலஸ் பூரன் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்து, 19 பந்தில் 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, கடைசி மூன்று ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தது. இந்த நிலையில் பதோனி, மார்க் வுட் உனட்கட் என்று வரிசையாக வெளியேற, கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் கைவசம் இருந்தது. ஆவேஷ் கான் பேட்டிங் முனையிலும், ரவி பிஷ்னோய் பந்துவீச்சு முனையிலும் இருந்தார்கள்.

கடைசிப் பந்தை வீச வந்த ஹர்சல் படேல், பந்தை வீசி முடிக்கும் முன் ரவி பிஷ்னோய் கிரிசை விட்டு வெளியேற ரன் அவுட் செய்ய முயன்றார். பந்து வீச வந்த வேகத்தில் அவர் முதல் முறை கையை நீட்டும் பொழுது ஸ்டெம்ப் எட்டவில்லை. ஓடி வந்த வேகத்தில் கிரீசை தாண்டி இரண்டாவது முறையாக பந்தை ஸ்டெம்பில் அடித்தார்.

இதற்கு முதலில் மூன்றாவது நடுவரிடம் செல்வதாக சைகை காட்டிய கள நடுவர் பின்பு மூன்றாவது நடுவரிடம் போகவில்லை. ஹர்சல் படேல் கிரிசை விட்டு வெளியேறி அதற்குப் பின்பு பந்தை எறிந்து ரன் அவுட் செய்ய முயன்றதால் நடுவர் அதை நிராகரித்தார். மேலும் பவுலிங் ஆக்சன் முழுவதும் நிறைவடைந்ததாகவும் இது கணக்கில் வருகிறது. 

எனவே மேற்கொண்டு கடைசிப் பந்தை வீச சொல்லிவிட்டார். கடைசிப் பந்தை தினேஷ் கார்த்திக் பிடிக்க தவறிவிட, லக்னோ பேட்ஸ்மேன்கள் விரைவாக ஓடி வெற்றிக்கான ரன்னை எடுத்து வெற்றி பெற்றார்கள். பந்துவீச்சாளர் இப்படியான ரன் அவுட்டை செய்ய கிரீசுக்குள் இருக்க வேண்டும். மேலும் பந்துவீச்சு ஆக்சன் முழுமையாக நிறைவடைந்து இருக்கக் கூடாது. அதாவது ஒரு பந்தை முழுமையாக வீசுவதைப் போல் முடித்திருக்கக் கூடாது.

 

 

இந்நிலையில் ஹர்ஷல் படேல் இந்த ரன் அவுட்டை தவறவிட்டதை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசபோல் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை தவறவிட்டதையும் ரசிகர்கள் விமர்சனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement