
Two People Kicked Out Of WTC Final Venue For Inappropriate Behavior (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது மைதானத்திலிருந்து ரசிகர்கள் சில நியூசிலாந்து அணி வீரர்களை வசைபாடுவதை போல் நடந்து கொண்டதாக் ஐசிசிக்கு ட்விட்டர் வாயிலாக புகர் வந்துள்ளது.