
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு தோரும் ஒவ்வொரு நடுகளுக்கு இடையே நடத்தும் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு வரும். அதற்கேற்றது போல் தற்ப்போது அடுத்த 4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுல்ளது.
இந்த நான்கு ஆண்டுகளிலும் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் 173 டெஸ்டுகள், 281 ஒருநாள், 323 டி20 போட்டிகள் விளையாடவுள்ளன. முன்னதாக கடந்த 4 வருடங்களில் இந்த 12 நாடுகளும் 694 ஆட்டங்களில் விளையாடின.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1992க்குப் பிறகு முதல்முறையாக 5 போட்டிகளைக் கொண்ட இரு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. 2024-25-ல் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என இரு நாடுகளுக்கும் எதிராகவும் இந்தியா தலா 5 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் இனி விளையாடும்.