Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: ரீஸ் டாப்லிக்கு மாற்றாக டைமல் மில்ஸ் சேர்ப்பு!

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 19, 2022 • 22:20 PM
Tymal Mills To Be Named As Reece Topley’s Replacement In England’s 15-man Squad
Tymal Mills To Be Named As Reece Topley’s Replacement In England’s 15-man Squad (Image Source: Google)
Advertisement

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.  மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹாபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. 

நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.  டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. 

Trending


மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து ரீஸ் டாப்லிக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டைமல் மில்ஸ் 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement