மகளிர் யு19 உலகக்கோப்பை: நியூசிலாந்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
நடப்பு அண்டர்ஆ19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது கேப்டன் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், குரூப் டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
தொடர்ந்து சூப்பர் 6 குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றது. அதோடு சூப்பர் 6 பிரிவிலும் முதலிடம் பிடித்தது. அதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி இந்திய மகளிர் அண்டர் 19 அணி தகுதி பெற்றது.
Trending
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அண்டர் 19 அணி, நியூஸிலாந்து அண்டர் 19 அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து இந்திய அணி 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.
இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய சுவேதா செஹ்ராவத், 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். மொத்தம் 10 பவுண்டரிகளை அவர் விளாசினார். இந்த தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 292 ரன்களை எடுத்துள்ளார் .
இதையடுத்து இந்திய அணி வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now