-mdl.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன் செய்திருந்தன. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது வாசீம் - ஆர்யன் லர்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன் லர்கா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விருத்யா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும், தனிஷ் சூரி 7 ரன்களிலும், துருவ் பரஷர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலுயனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் வசீமும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, பசில் ஹமீத் 12, அலி நசெர் 21 என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளையும், கைஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.